எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருப்பினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கேற்பவே பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
நேற்று (19) மாத்தறையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
20 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சியினர் போலிப் பிரச்சாரம் செய்கின்றனர். ஏனைய நாடுகள் தீர்மானிக்க முன்னரே பிள்ளைகளின் நலன்களைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை மூடும் தீர்மானத்தை நாம் எடுத்தோம். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நாம் அறிவித்துள்ள போதிலும் சுகாதாரத் துறையின் ஆலோசனையின் படியே ஆரம்பிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும். ஆரம்பிப்பதா இல்லையா என்பதை சுகாதாரத் துறையே தீர்மானிக்கும்.
நாம் பிள்ளைகளுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தீர்மானங்களை மேற்கொள்ள மாட்டோம்.
என கல்வி அமைச்சர் டலஸ் அலக பெரும தெரிவித்தார்.