அடுத்த வாரம் முதல் பாடசாலைகளின் சுகாதார ஏற்பாடுகள் தொடர்பான கண்காணிப்புக்காக கல்வி அமைச்சு நியமித்துள்ள குழுக்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்யவுள்ளது.
பாடசாலை நுழைவாயிலில் கைகழுவதற்கான வசதிகள் மற்றும் ஏனைய ஒழுங்கு விதிகள் தொடர்பில் இந்தக் குழுக்கள் பாடசாலைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளன.
பாடசாலைகளுக்கு பயன்படுத்துவதற்கென பத்தாயிரம் உடல் வெப்பமானிகள் கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானி எனும் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அவை வினியோகிக்கப்படவுள்ளன.