“சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்தவுடன் மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சனிக்கிழமை (பிப்ரவரி 06) தெரிவித்துள்ளார்.
ஆரம்ப மற்றும் உயர் தர மாணவர்களுக்கு மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றுள்ளது. அத்துடன் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் 1356 பாடசாலைகள் உள்ளன.
பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான பரிந்துரைகள் சுகாதார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2021 மார்ச் 14-க்குப் பிறகு மேற்கு மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பல தரப்புக்கள் பரிந்துரைத்தன, ”என்று பேராசிரியர் கபில பெரேரா மேலும் கூறினார்.
இதே நேரம் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களின் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை பெப்ரவரி 15 முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.