சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட வேண்டும் என இலங்கை ஆசிரிய சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19 க்குள் கொரோனா முடிந்துவிட்டது என்று சுகாதார அமைச்சர் ஒருவர் கூறும் இந்த நாட்டில், அரசாங்கத்தின் நோக்கம் பொதுமக்களுக்கு மிகவும் தெளிவானது என அவர் தெரிவித்தார்.
பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ள வேளையில், மாணவர்கள் மிக விரைவில் தொற்றுக்குள்ளாக நேரிடலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எட்டப்பட வேண்டும் என அவர் கூறினார்.