சுரக்ஷா மாணவர் காப்புறுதி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரச வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு 1000 ரூபாவில் இருந்து 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வௌிச் சிகிச்சை பெறுகைக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான கொடுப்பனவு ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது பகுதியாக ஊனமுற்றவர்களுக்கான கொடுப்பனவு 50000 – 100000 இலிருந்து 50000 – 200000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது நேரிடும் தாய் தந்தை மரணத்திற்கு 75000 இலிருந்து ஒருவருக்கு 200000 வரையும் மாணவர் மரணமடையும் போது வழங்கப்பட்ட 100000 ரூபா 150000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாரதூரமான நோய் சிகிச்சைக்கான கொடுப்பனவு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு 200 000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.