சுரக்ஷா மாணவர் காப்புறுதி மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரைக்கமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காப்புறுதி நிறுவனம் தொடர்பான சர்ச்சைகள் கடந்த வாரங்களில் மேலெழுந்தன. அதன் பின்னர் கல்வி அமைச்சு நேரடியாக தம்மிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது.
எனினும் இத்திட்டம் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக ஜனாதிபதிக்கு கிடைத்த பல்வேறு முறைப்பாடுகளை விசாரித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி பணி்ப்புரை விடுத்துள்ளார்.
விசாரணையின் பின்னர் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.