எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அழகியற்கலை செயன்முறை பரீட்சை தயார்படுத்தல்கள் மற்றும் செயன்முறைப் பரீட்சை ஆகியவற்றிலிருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கல்வியமைச்சிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செயன்முறைப் பரீட்சைக்கான பயிற்றுவிப்புப் பணிகளுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவதை தாம் கண்டிப்பதாகவும், உரிய தீர்வின்றேல் ஏனைய பரீட்சைகள் தொடர்பாகவும் கடினமான தீர்வுகளை எட்ட வேண்டிவரும் எனவும் சுட்டிக்காட்டி, கல்விசார் ஊழியர் சங்கமும் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இன்றும் வார இறுதியிலும் பிராந்திய ரீதியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது.
ஆசிரியர், அதிபர்களின் நியாயமான கோரிக்கைளை தீர்க்க முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்கார்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர்.