க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எழுத்துப் பரீட்சைகள் முடிவடைந்ததன் பின்னர் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
பிரயோகப் பரீட்சை நடைபெறும் இடம் மற்றும் தினம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அனுமதி அட்டையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப சங்கீகதம் (40) (மேலைத்தேய), சங்கீகதம்(41) (கீழைத்தேய), இசை (42) (கர்நாடகம்), நடனம் 44 (தேசிய), நடனம் 45 (பரதம்) நாடகமும் அரங்கியலும் (50) சிங்களம், நாடகமும் அரங்கியலும் 51 (தமிழ்), நாடகமும் அரங்கியலும் 52 (ஆங்கிலம்) முதலான பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் முன்னர் போன்று இம்முறையும் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கணிப்பீடு முறைகளில் புதிய கல்வி திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.