டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய கல்வியியல் கல்லூரியின் டிப்ளோமாதாரிகளுக்கான நியமனத் தாமதத்தை கண்டித்து இன்று காலை கல்வி அமைச்சின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கல்வி அமைச்சு இந்த முடிவு அடங்கிய கடிதத்தை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமாதாரிகளின் பங்களிப்போடு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கல்வி அமைச்சு வழங்கிய கடிதத்தை கீழே காணலாம்.
டிசம்பர் 31, ஜனவரி 11, ஜனவரி 15 என்ற உறுதி மொழி ஜனவரி 18 ஆக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.