அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் என்று கூறி கல்வி அமைச்சு 3000 பேருக்கு நியமனங்கள் வழஙகுவதற்கு எதிராக கடந்த காலங்களில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை அடுத்து ஜனாதிபதி குறித்த நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகளைக் கருத்திற் கொள்ளாது கல்வி அமைச்சு மீண்டும் 1028 பேருக்கான நியமனங்களை அல்லது பதவு உயர்வுகளை வழங்குவதறாக கல்வியைப் பாதுகாப்பதற்கான வாண்மையாளர்களின் ஒன்றிணைவு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நியமனங்களுக்கு எதிராக தொழில் சங்கங்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. இலங்கை கல்வி நிர்வாக சேவை பிரமானக் குறிப்பின் படி நியமனங்களை அரச சேவை ஆணைக்குழு என்ற போதிலும் அரச சேவை ஆணைக்குழு ஜனாதிபதியின் அமைச்சரவைப்பத்திரத்திற்கு முரணாக தமது பொறுப்புக்களை கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கும் செயன்முறையை நிறுத்தி இது தொடர்பாக ஒழுங்குமுறைப்படி ஆராயுமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கைஐக்கிய ஆசிரியர்கள ்சங்கம், சுயாதீன கல்வச் சேவைச் சங்கம், இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம் முதலான சங்கங்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டுள்ளனர்.
இக்கடிதம் பின்வருமாறு