ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய பாதுகாப்புக்கு அடுத்தபாடியாக நாட்டைக் கட்டியெழுப்புவதில் கல்வித்துறைக்கு முக்கிய இடம் வழங்கியிருப்பதாக கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்
இதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் தனது கடமைகளை இன்று பிற்பகல் ஆரம்பித்தார். நாட்டில் உள்ள அதிகளவான பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகள்; 19 ஆவது நூற்றாண்டுக்குரியவைகளாக உள்ளன. இதனால், கல்வித்துறையில் சிக்கல் நிலவுகின்றன. ஆழமாக கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரணசிங்க உட்பட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.