கடந்த வரவு செலவுத்திட்டத்தின் கீழ் வாக்களிக்கப்பட்ட ரூபா 2500 அரச ஊழியர்களுக்கு வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இக்கொடுப்பனவு ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. இதன்படி வாழ்க்கைப்படிச் செலவு ரூபா 7800 யாக அதிகரிக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.