ஜோஸப் ஸ்டாலின் உட்பட பலரும் விடுதலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் செயாரள் துமிந்த நாகமுவ உட்பட கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட 22 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி பயணமானார்கள்.
விடுதலை பெற்று வெளியே வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், போராட்டத்திற்கு துணை நின்ற சக போராளிகளுக்கு நன்றிகள் கூறியதுடன், ஊடகங்களுக்கும் நன்றிகள் தெரிவித்தார்.
அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்
ஜோஸப் ஸ்டாலின் உட்பட பலரும் தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஒன்லைன் கற்றலில் இருந்து ஆசிரியர்கள் ஒரு வாரமாக விலகியுள்ளனர். இந்த பின்னணியிலேயே தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்லைன் கற்றலில் இருந்து விலகியிருக்கும் போராட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரியவருகிறது.