தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்று வெளியேறியுள்ள சுமார் 4000 டிப்ளேமாதாரிகளுக்கான நியமனங்களை துரிதப்படுத்தும் வகையில் நியமனத்திற்கான தகவல்களை ஒன்லைனில் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நியமனத்திற்கான பாடசாலைகள் தொடர்பான தெரிவுகள் ஒவ்வொரு முறையும் நடாத்தப்பட்ட போதிலும் இவ்வருடம் தற்போதைய கோரோனா நிலைகாரணமாக இந்த அமர்வை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆசிரியர்கள் நியனம் பெற விரும்பும் பாடசாலைகள் உட்பட நியமனத்திற்கான தெரிவுகளை ஒன்லைனில் கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தரவுத் தளம் தயாராகிக்கொண்டிருப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் அதற்கான இணைப்பு மற்றும் தகவல்கள் வெளியிடப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
🔵
கல்வி தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்
முகநூல் பக்கம்
www.facebook.com/www.teachmore.lk
வட்சப் குழுமம்
https://chat.whatsapp.com/FKCerjdcG0wJLbTQ6EkuuS
டெலிகிராம் குழுமம் – https://bit.ly/3lBMBMH
.