தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2016-2018 டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் தொடர்பாக கல்வி அமைச்சு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையைக் கண்டித்து ஜனவரி 5 ஆம் திகதி ஆரப்பாட்டம் ஒன்றுக்கு இலங்கை ஆசிரயர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளன..
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
டிசம்பர் 31 க்குள் வழங்குவதாகக் கூறப்பட்ட நியமனங்களை வழங்காமை மற்றும் உள்ளீர்ப்பு அடிப்படையில் குறிப்பிட்ட பிரதேச செயலகத்திற்குள் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமை ஆகியவற்றைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இவ்வார்ப்பாட்டத்தில் டிப்ளேமாதாரிகள் அதிகளவில் கலந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.