கடந்த வாரம் அதிவிசேட வர்த்தமானி மூலம் கையகப்படுத்திய டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் ஒரு பகுதி நிலத்தை மீண்டும் தமது கல்லூரிக்கு வழங்குமாறு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வேண்டிள்ளது.
கல்லூரியின் ஆசிரியர் விடுதி அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையகப்படுத்தும் வர்த்தமானிக்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பியதை அடுத்து அமைச்சர்கள் அத்திட்டத்தை வாபஸ் வாங்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.
எனினும் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் படி பழைய மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.