நாட்டில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 30 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என இது வரை மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கல்வி அமைச்சோடு இணைந்து டெங்கு ஒழிப்புக்கான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 வீதம் குறைவடைந்துள்ளதோடு டெங்கு மரணங்களை 90 வீதத்தினால் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
புதிய தொழிநுட்ப உத்திகள் மற்றும் பரீட்சிப்பு நடவடிக்கைகள் தெளிவூட்டல் முதலானவற்றின் காரணமாக இவ்வாறு குறைத்துக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அப்பிரிவு அறிவித்துள்ளது.