இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பட்டத்திற்கு 10,000 மாணவர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
கணினி தொடர்பான வேலைகளுக்கு நாட்டில் சுமார் 40,000 வெற்றிடங்கள் உள்ளன.
பல்கலைக்கழக மானிய ஆணையம், இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஒன்லைன் பட்டப்படிப்பைத் தொடங்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.