கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை விங்குமாறு அரசிடம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பேணி, மேல் மாகாணத்தில் ஏனைய தரங்களை பெப்ரவர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான இயலுமைகள் பற்றி ஆராய்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேவி பாலிகா, நாலந்தா வித்தியாலயம், முதலான பாடசாலைகளுக்கு இன்று 29 ஆம் திகதி கல்வி அமைச்சர் விஜயம் செய்து நிலமைகளை அவதானித்ததுடன் இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
பிள்ளைகளோடு தினமும் புழங்கும் தரப்பு என்ற வகையில் கோவிட் தடுப்பூசி வழங்கலில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது மிகவும் நியாயமான கோரிக்கை என்பதனால் அக்கோரிக்கையை அமைச்சர் என்ற ரீதியில் அரசாங்கத்திடம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.