தடுப்பூசி பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக கல்வித்துறை பணியாளர்களின் தரவுகள் கோரப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தடுப்பூசி பெற்றுக் கொண்ட மற்றும் பெற்றுக் கொள்ளாத கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளது.
இதன் மூலம் கல்வித் துறை பணியாளர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை ஒதுக் கொள்வதற்கு முடியுமாக இருக்கும் என கல்வி அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது
இத்தரவுகள் வலயங்கள் மற்றும் மாகாணங்கள் ஊடாக கல்வி அமைச்சு பெற்று, தேவையான தடுப்பூசிகளை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கின்றது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புகிறது.