கல்வியமைச்சு செயலாளர் கபில ெபரேரா திட்டவட்டம்
பாடசாலை துறைசார் 2,79,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னர் அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறைசார் ஊழியர்கள் 2,79,000 பேருக்கு தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயணத்தடை கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டாலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் இதுவரை கல்வி அமைச்சுக்கு வழங்கப்படவில்லை.
-Thinakran-