தனியார் வகுப்புக்கள் அனைத்தையும் எதிர்வரும் மார்ச் 26 வரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் வகுப்புக்களின் தொழில்முறை விரிவுரையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அமித் புஸ்வெல்ல இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.