தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக தரம் 8 தகுதிகாண் பரீட்சையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
தரம் 8 இல் திறமையை இனங்கண்டு உயர் கல்வி துறையில் மேற்படிப்பை தொடர மாணவர்களுக்கு வழிகிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கடவத்த மகாமாய பாலிகா வித்தியலயத்தின் புதிய விளையாட்டங்குடனான இரு மாடிக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் கல்வி அமைச்சு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை என அறிவித்திருந்தது.
இப்பின்னணியில் ஜனாதிபதி மீண்டும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.