2019 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றன.
நாடுமுழுவதும் 10194 அரச பாடசாலைகளில் 9193 பாடசாலைகளில் இன்று இவ்வைபவம் இடம்பெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 4 இலட்சம் மாணவர்கள் தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.
இதற்கிடையில் 2019 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இன்று கிரியுல்ல கனேகொட ஆரம்ப பாடசாலையில் நடைபெறுகின்றது.
இதனோடு இணைந்ததாக, ‘ஒன்றாக வளர்ப்போம், ஒன்றாக வளர்வோம்’ எனும் தொணிப்பொருளின் கீழ் மரநடுகை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை ஆரம்ப காலம்முதலே மரம் நடுகை தொடர்பாக ஆர்வமூட்டுவதே இதன் நோக்கமாகும்