காலி பாடசாலை ஒன்றின் தரம் ஒன்றுக்கு மாணவரெருவரை அனுமதிப்பதற்காக லஞ்சம் பெற்ற மாகாணக் கல்வி அமைச்சின் ஆவண உதவியாளர் பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
தரம் ஒன்றுக்கு மாணவர் அனுமதி தொடர்பாக பெறப்பட்டுள்ள லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து கல்வி அமைச்சு ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. நிகழ்வு தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகின்றது.
கல்வித் துறையில் லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நீக்குவதற்காக கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் விசேட தகவல் பெற்றுக் கொள்ளும் முறைமை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமையினால் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.