புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி மற்றும் தரம் 06 க்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தாம் நிராகரிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை கல்வி அமைச்சிற்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவைக சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது.
கல்வி அமைச்சு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இரு தரப்பு உடன்பாடுகளின் அடிப்படையிலான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதோடு கல்வி அமைச்சின் ஒரு தலைப்பட்சமான தீர்மானங்கள் மாத்திரமே அடங்கியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க குற்றம் சாட்டினார்.
இது தொடர்பான பிரச்சினைகளுக்கு கல்வி அமைச்சு முறையான தீர்வை வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.