ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக பாடசாலை நடைபெறாமல் விடுபட்டதன் அடிப்படையில் தவணைப் பரீட்சைகளை ரத்துச் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே தேசிய பரீட்சைகளும் திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
21 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.