கொழும்பு டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையில் அமைக்கப்பட்டுவரும் தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் தற்பொழுது முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
7, ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படடுள்ள இதன் உயரம் 356 மீற்றர்களாகும். வர்த்தக நடவடிக்கைகளுக்காக கோபுரத்தின் கீழ் பகுதியில் 3 மாடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனதாக திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்துள்ளார்.
மாடியின் மேற்புறத்தில் எட்டில் இரண்டு பகுதி வானொலி மற்றும் தொலைக்காட்சி கோபுரங்களின் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாடிகள் வைபவங்களை நடத்துவதற்காக திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு மேலும் தெரிவித்துள்ளார். (நியுஸ்.எல்கே)