ஜனாதிபதி மைத்திரி பால சிரி சேன தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக அண்மைக் காலத்தில் தெரிவித்துவ ரும் கருத்துக்களை உண்மைப்படுத்தும் வகையில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தூக்கிலிடுபவர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
விண்ணப்பதாரி ஆண் ஆக இருப்பதோடு க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்கள் சித்தி பெற்றிருக்க வேண்டும்.