இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகளை நாளை 14.01.2020 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இத்திர்மானத்திற்கு இனங்க இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் எதிர்வரும் மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின் மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்படுகின்றது என்பதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.