தொடர் 2 – 0 என வெற்றி
– தென்னாப்பிரிக்க மண்ணில் ஆசிய அணியொன்று பெற்ற முதலாவது வெற்றி
தென்னாபிரிக்க -இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வரலாற்று வெற்றி ஈட்டியுள்ளது. இது தென்னாபிரிக்க மண்ணில் ஆசிய அணியொன்று பெற்ற முதலாவது வெற்றியாகும்.
தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது. இப்போட்டியில் 197ஓட்டங்களில் 110பந்துகளில் 84ரன்களைக் குவித்தார் குசல் மென்டிஸ், இவர் ஒசத பெர்ணான்டோவுடன் இணைந்து 106பந்துகளில் 75ரன்களை எடுத்தார்.
இன்றைய இறுதி நாள் ஆட்டத்தின் போது, தென்னாபிரிக்காவுக்கு 8விக்கெட்டுகளும், இலங்கைக்கு 137ஓட்டங்களும் தேவையாக இருந்தது. ஆனால், ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் இலங்கை இவ்வெற்றியை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2 -0என தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இலங்கை அணியின் குசல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.