தென் கொரியாவின் இன்சியோன் நகரில் உயர் பாடாசலைகள் 66 கடந்த மே 20 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டு இரு மணி நேரங்களில் மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரு மாணவர்கள் வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். எனினும் மீண்டும் 25 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாணவர்களுக்கும் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த இரு தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு பட்டிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு சென்றுள்ள ஏனைய மாணவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகள் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளன.
எனவே, பாடசாலைகளை மூடி வைக்குமளவிற்கு தேசிய ரிதியான பரவல் இனங்காணப்படவில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் மே 25 மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.