தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் மற்றும் இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவை உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தேசிய கல்வியல் கல்லூரியின் நடவடிக்கைகளை பின்வரும் ஒழுங்கில் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
2017-2019 குழு – மூன்றாம் வருடத்தினருக்கான இறுதிப்பரீட்சை 2021.11.15 ஆம் திகதி ஆரம்பித்தல்
2018-2020 குழு – இரண்டாம் வருடத்தினருக்கான ஒன்லைன் வகுப்புக்கள் 2021.11.15 முதல் இடம்பெறும்
2020-2022 குழுவினருக்கான அனுமதிக்கான பதிவுகள் 2021.12.15-16 ஆகிய திகதிகளில் இடம்பெறும்
2020-2022 குழுவினருக்கான புதிய அனுமதிக்கான விண்ணப்பதாரிகளில் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டியதற்கான நேர்முகப் பரீட்சை 2021-12-01 முதல் 2021.12.13 வரை இடம்பெறும்
தேசிய கல்வியியல் கல்லூரிகள் மீண்டும் கல்வி அமைச்சின் கீழ் கையப்படுத்தப்பட்டதன் பின்னர், கல்வி நடவடிக்கைகளுக்காக 2018-2020 குழுவினருக்கான பாடநெறியின் கட்டுறுப் பயிற்சி பிரயோகம் பாடெநறி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக கட்டுறுப்பயிற்சிக்கான 10 மாதங்களில் 3 மாதங்களில் 3 மாதங்கள் கல்வியியல் கல்லூரிகளுக்குள் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அது, கல்வி அமைச்சுக்கு தேசிய கல்வியியல் கல்லூரிகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் 3 மாதங்கள்