தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பெறுபேறுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
நேற்று புதன் கிழமை (14) நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவக சபைக் கூட்டத்தில் இறுதிப் பெறுபேறு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் இறுதி ஆவணம் தயார் செய்யப்படுவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் teachmore விற்கு உறுதிப்படுத்தின.
பெறுபேறுகள் அடுத்த வாரத்தின் திங்கட்கிழமையன்று கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
அதன் பின்னர், நியமனத்துக்கான நடடிவக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என்றும் தெரியவருகிறது.