தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங் கோரல் தாமதமைந்துள்ளது.
2018 ஆம் க.பொ.த உயர் தர மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு எதிர்பார்க்கும் விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த போதிலும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு இரு வருட மாணவர்களையும் ஒரே குழுவாக உள்ளீர்ப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கருத்திற் கொண்டு இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த வருடம் இவ்வாறே இரு வருட மாணவர்கள் ஒன்றாக உள்ளீர்க்கப்பட்டுள்ளமையினால் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இடவசதி பற்றாக்குறை தீவிரமாக நிலவும் இச்சூழலில் மேலும் இரு வருட மாணவர்களை ஒன்றாக உள்ளீர்ப்பதில் பல சவால்கள் உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனினும் மாற்று வழிமுறைகளை பிரயோகித்து இரு வருடங்களுக்குமான மாணவர்களை ஒரே குழுவாக உள்ளீர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி அவற்றிலும் தேசிய கல்வியியல் கல்லூரிகளை இயங்க வைத்து இடப்பிரிச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற வகையிலும் ஆராயப்படுவதாக அறிய முடியகிறது.
ஜனாதிபதி பிரேரித்துள்ள கல்விமாணி பட்டம் வழங்குவதற்கான வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேசிய கல்வியியல் கல்லூரிகளை தயார் செய்வதற்கு இவ்வாறு இரு வருட மாணவர்களையும் உள்ளீர்த்து விடுவது தீர்வாக அமையும் எனவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
எனினும், இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.
இரு வருட மாணவர்களையும் ஒரே குழுவாக உள்ளீர்ப்பது சாத்தியமற்றது என தீர்மானிக்கப்படும் போது, விரைவில் 2018 வருட மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும்.
இரு வருட மாணவர்களையும் உள்ளீர்ப்பது சாத்தியம் என்ற தீர்மானம் எட்டப்படும் போது, வர்த்தமானி அறிவித்தல் சற்று தாமதமையலாம் என விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(உள்பெட்டிகளில் நிறைந்து வழியும் கேள்விகளுக்கான பதிலாக எழுதப்பட்டது)
சைவ பாட ஆசிரியர் பரிட்சைக்கான இறுதி முடிவுகள் எப்போது வெளியிடப்படும் ????