தேசிய கல்வியியல் கல்லூரிகளின் உள்ளகக் கற்கையை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு தமது வீடுகளுக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் கட்டுறுபயிற்சியை பெற கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளக பயிற்சியை பெற தயாராகும் மாணவர்களிடம் இந்த இணைப்பிற்கு தேவையான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளை கல்வியியல் கல்லூரி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகில் உள்ள பாடசாலை, வலயம், ஆசிரிய மத்திய நிலையம் முதலான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
எனினும், இந்த திட்டம் ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே மேற்கொள்ளப்படுவதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளகப் பயிற்சி மேற்பார்வை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக கல்லூரி தரப்பு தெரிவிக்கிறது.
எனினும் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் எதுவும் இது தொடர்பாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது