தேசிய கல்வியியல் கல்லூரிகள் வழமைபோன்று இயங்கும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய கல்வியியல் கல்லூரிகள் அதற்கான தவணைக் கால அட்டவணைக்கேற்ப முதலாம் தவணைக்காக மூடப்படும் என அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைகள் போன்றல்லாது கல்வியல் கல்லூரிகள் வெளித் தொடர்பு குறைவாகக் கொண்டுள்ளமையினால் கொரோனா தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் நிலமையைப் பொறுத்து கல்வி அமைச்சு பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் எனவும் அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.