தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களின் போது ஒன்லைன் விண்ணப்பம் கட்டாயமானது என 2019.01.25 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பல விண்ணப்பதாரர்கள் அவ்வாறான ஒன்லைன் விண்ணப்பத்தின் ஊடாக பிரவேசிக்க முடியவில்லை என்ற முறைப்பாட்டடை கல்வி அமைச்சுக்கு முன்வைத்துள்ளமையினால் ஒன்லைன் முறையில் விண்ணப்பிப்பது கட்டாமில்லை என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
எனினும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டதைப் போன்று முறையாக நிரப்பிய விண்ணப்ப படிவத்தை அனைத்து ஆலோசனைகளையும் பேணி 2019.02.15 க்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைப்பது கட்டாயமனது என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பதிவுத் தபாலில் அனுப்பப்படாத விண்ணப்பங்கள் தொடர்பாக கல்வி அமைச்சு எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது என்றும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.