கோவிட்19 பரவலுக்கு மத்தியியல் தேசிய கல்வியியல் கல்லூரிகளை நடாத்திச் செல்லுவது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தற்போதைய கொவிட் பரவல் தொடர்பாக தொலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தகவல்கள் பரிமாறி, இந்த செயற்பாடுகள் தோல்வியடைந்து கொண்டிருப்பதாக அவதானிக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக் கட்டியுள்ளார்.
எனவே, மாணவர்களுக்கு ரபிட் அண்டிஜன் பரிசோதனை செய்து, தொற்றாளர்களை வேறாகப் பிரித்து, அவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் சிகிச்சை அளித்து, பிரச்சினைகள் காணப்படின் அவர்களை வைத்திய சாலைகளில் அனுமதிக்குமாறும், பெற்றாரின் வேண்டுகோள் இருப்பின் அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்வியியல் கல்லூரிகளையும் ஒரே முடிவில் நடாத்திச் செல்லாது, ஒவ்வொரு கல்லூரி நிலமைகளுக்கும் ஏற்ப சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்குமாறும், அதற்கான மாணவ பிரதிநிதிகள் மற்றும் நிர்வாக குழுவினர் கூடி தீர்மானம் எடுத்தமையை எழுத்துமூலமான சான்றுகளுடன் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.