தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் கல்விமாணி பாடநெறிக்கான விரிவுரைகள் (இவ்வாரம் இடம்பெறவிருந்த விரிவுரைகள்) ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடுமுழுவதும் நடைபெறும் அனைத்து நிலையங்களினதும் விரிவுரைகளை ரத்துச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரைகள் ஆரம்பிப்பது தொடர்பாக தீர்மானித்து பின்னர்
அறிவிக்கப்படும் என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.