தேசிய கல்வி நிறுவகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நாளை (25) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
166 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடம் ஐந்து மாடிகளைக் கொண்டது.
உயிரியல் தொழிநுட்பம், உணவுத் தொழிநுட்பம் உட்பட தொழிநுட்பப் பாடங்களுக்கான 3 ஆய்வுகூட்கள், புவியியல், கணிதம், உயிரியல் விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதீக வியல் ஆகிய பாடங்களுக்கான 3 ஆய்வுகூடங்களும், திறன் விரிவுரை மண்டபங்கள் 4 உள்ளடங்கலாக புதிய அதி நவீன கேட்போர் கூடமும் கொண்ட இக்கட்டடத் தொகுதி ஆசிரியர் பயிற்சிக்கான நவீன வசதிகளைக் காெண்டுள்ளது.
இக்கட்டத்தை கல்வி அமைச்சர் தலைமையில் பிரதமர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் கல்வி அமைச்சின் செயலாளர் நாளை திறந்து வைப்பாரென தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதனோடு இணைந்த வகையில் கல்விக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதோடு, தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி நிகழ்சிகள் அடங்கிய யு டியுப் சனல் ஒன்றும் அங்குரார்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.