தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் இரு வாரங்களில் கோரப்படும் என பாடநெறியின் இணைப்பாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் இவ்விண்ணப்பம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் விண்ணப்பம் கோரும் செயன்முறையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும் மிக விரைவில் இம்மாத இறுதிப் பகுதிக்குள் பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் தேசிய பத்திரிகையில் வெளியிடப்படும் அதேவேளே எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.