2021 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளில் இடைநடுத் தரங்களில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது பெப்ரவரி 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே, இது தொடர்பாக கல்வி அமைச்சிற்கு கோரிக்கை முன்வைத்தல், வருகை தந்து கோரிக்கை முன்வைத்தல், அல்லது வெளி நபர்களிடமிருந்து அழுத்தம் கொடுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.