தேவி பாலிகா வித்தியாலயத்தின் உயர் தர வகுப்புக்களை கங்கொடவில விஜயராம வித்யாலயத்துக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டிருந்த திட்டத்திற்கு பல தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக, அத்திட்டத்தை கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கங்கோடவில விஜயராம வித்யாலயத்தில் ஆரம்ப வகுப்பு முதல் உயர் தரம் வரை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கான திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் தேவி பாலிகாவின் உயர் தர வகுப்புகளை மேம்படுத்த மாற்றுத் திட்டம் பரிசீலிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, டி.எஸ். கல்லூரியின் ஒரு பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி வெளிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக அத்திட்டமும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.