தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்காக தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பின்னிற்கப் போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்னார் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 5 ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளிலும் பாடசாலை முடிவடைந்ததன் பின்னர் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். ‘
எதிர்வரும் 13 ஆம் திகதி அனைத்து ஆசிரியர்களும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.