உயர்தர தொழிற்கல்வி பாடநெறியின் கீழ் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்காக வங்கி புத்தகங்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று பி.ப 2.00 மணிக்கு இடம்பெற்றது.
இது தொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டார்.
2017 ஆம் ஆண்டு முதல் பாடசாலை கட்டமைப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட உயர்தர தொழிற்கல்வி பாடநெறியின் கீழ் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்காக வங்கி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. சமப்படுத்த முடியாத நான்காண்டுகள் புரட்சிகரகான கல்வி நவீனமயப்படுத்தலுடன் இணையும் 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். (அததி)