உலகப் பிரபலமான நோபல் பரிசை வெல்பவர்களுக்கு நடப்பாண்டு முதல் 1 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதாக நோபல் பரிசு உள்ளது. நோர்வே பாராளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இரசாயனம், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் பௌதீகவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைப் பெறுவார்கள் என்று விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நோபல் அறக்கட்டளையின் நிதிநிலைமையைப் பொறுத்து அவ்வப்போது பரிசுத்தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.