2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 4. 4 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செலவீனம் 14.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் முதல் 5 மாதங்களில் 1.775 பில்லியன் அமெரிக்க டொலருக்கு 7.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கடந்த மே மாதத்தில் 71 மில்லியன் அமெரிக்க டொலருக்கு 70.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.