நாம் பாடசாலைக்கு சமூகளிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்கிறோம் – தொழில் சங்கங்கள் அறிவிப்பு
நாளை முதல் அமுலாகும் புதிய சுற்றுநிருபத்தின் படி, கல்வி சார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்கு சமூகம் தருமாறு கல்வியமைச்சின் செயலாளர் விடுத்த வேண்டுகோளுக்கு ஆசிரியர் அதிபர் தொழில்சங்கள் பதிலளித்துள்ளன.
தற்போது இடம்பெறும் பணிபகிஸ்கரிப்பின் காரணமாக தாம் பாடசாலைக்கு சமூகளிக்கப் போவதில்லை என்பதை கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆசிரியர் அதிபர் தொழில்சங்கள் அறிவித்துள்ளன.
ஆகஸ்ட் 2 இரண்டாம் திகதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படவுள்ளதோடு, ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆசிரியர் தொழில் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை .இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த பின்னணியில் புதிய சுற்றறிக்கையின் படி பாடசாலைகளுக்கு கடமைக்கு வருமாறு அழைத்துள்ளீர்கள். எனினும், தற்போது தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபபட்டுள்ளதால் நாம் பாடசாலைகளுக்க வருவதில் இருந்து தவிர்ந்து கொள்கிறோம் என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தை பின்வரும் ஆசிரியர் அதிபர் தொழில்சங்கங்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்டுள்ளனர்
ஜோஸப் ஸ்டாலின் – இலங்கை ஆசிரியர் சங்கம்
மகிந்த ஜயசிங்க – இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம்
யல்லேவல பஞ்ஞாசேகர தேரர் – அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
சுசில் பிரேமதிலக – அதிபர் சேவை சங்கம்
மொௌான் பராக்கிரம வீரசிங்க – இலங்கை தேசிய அதிபர்கள் சங்கம்
ஜகத் ஆனந்த சில்வா – சுயாதீன கல்வி சேவைகள் சங்கம்
சஞ்சீவ பண்டார – ஒன்றிணைந்த ஆசிரியர் சேவகள் சங்களம்
சுகீஸ்வர விமலரத்ன – இலங்கை வாண்மைத்துவ அதிபர்களின் சங்கம்
நிர்மலா கமகே – கத்தோலிக்க ஆசிரியர் சங்கம்
டப்.டப்.ஜே.எல்.எச். ரோவெல் – பயிற்றப்பட்ட கல்வியியல் கல்லூரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் அமைப்பு
மற்றும் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக்கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளன.