2021 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள போதிலும் நாடுமுழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில பிரதேசத்தின ்பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை நகர்ப்புறப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அம்பாறை நகர்ப்புறப் பாடசாலைகள் எதுவும் நாளை திறக்கப்படமாட்டாது என அம்பாறை வலயக் கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு ஏற்ப, டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலை, பண்டாரநாயக்க தேசிய மகளிர் கல்லூரி மற்றும் சத்தாதிஸ்ஸ வித்தியாலயம், மிஹிந்துபுர மற்றும் கரங்காவ முதலான பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என பலயக் கல்விப் பணிப்பளார் வினமலசேன மத்தும ஆரச்சி அறிவித்துள்ளார்.
இந்த பாடசாலைகளை மீளத் திறப்பது பற்றி சுகாதார அதிகாரிகளின் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய திகதி ஒன்றை அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு.
கலவான பிரதேசத்தில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அப்பிரதேசத்தின் 09 பாடசாலைகள் நாளை ஆரம்பமாகாது என கலவான கோட்டக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சப்ரகமுக மாகாணக் கல்வித் திணைக்களத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவான தேசிய பாடசாலை, கலவான ஆரம்ப கல்லூரி, கலவான காமினி மத்திய மகா வித்தியாலயம், ஜயந்தி மகா வித்தியாலயம், தபஸ்ஸரகந்த ரோயல் கல்லூரி, நாவலகந்த வித்தியாலயம், கொடிப்பிலிகந்த வித்தியாலயம், பிடிகலகந்த வித்தியாலயம் என்பன நாளை திறக்கப்படமாட்டாது என கலவான கோட்டக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது.
இப்பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவிப்பு பின்னர் சுகாதாரத் துறையின் தீர்மானத்தின் அடிப்படையில் வெளியவரும்.